இலவசங்களை எதிர்க்கும் பா.ஜ.க., இலவச வாக்குறுதிகளை வழங்குவதன் ஏன் என்ற கேள்வியையும் அரசியல் விமர்சகர்கள் எழுப்புகிறார்கள். ‘இலவசங்கள் என்று பிரதமர் மோடி போன்றவர்கள் பேசுவது ஏழைகளுக்கான நலத்திட்டங்களைத்தான். இத்தகைய திட்டங்களைத்தான் பா.ஜ.க எதிர்க்கிறது. ஆனால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்களை பா.ஜ.க அரசு வாரி வழங்குகிறது’ என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
அதே நேரத்தில், ‘பெரும் கார்ப்பரேட்களுக்கு வழங்கப்படும் அந்த இலவசங்களை பா.ஜ.க எதிர்ப்பதில்லை. கடந்த ஒன்பதாண்டு கால பா.ஜ.க ஆட்சியில், வரிச்சலுகை, கடன் தள்ளுபடி என ரூ.25 லட்சம் கோடியை பா.ஜ.க அரசு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது’ என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. ஏழைகளுக்கு கொடுத்தால் மட்டும் இலவசம் என்கிறார்கள்… பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராக தொடர்ந்து பேசினாலும் தேர்தல் நேரத்தில் பாஜக, இலவசங்கள் என்ற ஆயுதத்தை தவறாமல் எடுத்து விடுகிறது. எதிர்க்கட்சிகளின் இலவசங்களை கடிந்து கொள்ளும் மோடி, சொந்த கட்சியின் இலவசங்கள் தொடர்பான அறிவிப்பை மட்டும் எதுவும் சொல்லாமல் கடந்து செல்கிறார்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com