இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஹிரானந்தானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், “எங்களுக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நாங்கள் எப்போதும் வியாபாரத்தில்தான் ஈடுபட்டிருக்கிறோம், அரசியலில் இல்லை. எங்கள் குழு எப்போதும் தேசத்தின் நலனுக்காக அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. அதைத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் X -ல், “போலி பட்டம் தொடங்கிப் பல உரிமை மீறல் நோட்டீஸ்கள் பாஜக தலைவர்கள் மீது நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது சபாநாயகர் முடிவெடுத்தவுடன் என் மீது சபாநாயகர் தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதானி நிலக்கரி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை உள்ளிட்டோரும் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
