நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரைப் பாரத் என மாற்றவிருப்பதாக நேற்று ஒரு தகவல் பரவியது. டெல்லியில் இந்த வார இறுதியில் நடைபெறும் `ஜி 20″ மாநாட்டில் கலந்துகொள்ளும் உலகத் தலைவர்களை, இரவு விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைக்க, அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் திரௌபதி முர்முவை `பாரத குடியரசுத் தலைவர்’ ( The President of Bharat)’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதற்கு `இந்தியா, 140 கோடி மக்களுக்கானதே தவிர, ஒரு கட்சிக்கு மட்டுமானது அல்ல’ என எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ X வலைதளப்பக்கத்தில், “இந்தியாவை அழிக்க இயலாது” எனப் பதிவிட்டு, இந்திய அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட்டிருந்தது. அதில் ‘belief’ ‘நம்பிக்கை’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘brief’ ‘சுருக்கமாக’ என்பது போன்ற சில எழுத்துப் பிழைகள் இருந்தன.
நன்றி
Publisher: www.vikatan.com
