கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 4 தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் 8 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கின்றன. இதனால் கொள்கை முடிவு எடுக்க முடிவதில்லை. 1952 முதல் தேர்தலுக்கு ரூ.11 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டது. அதுவே 2010 ம் ஆண்டு ரூ. 60,000 கோடி செலவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 400 சீட்டுக்கும் அதிகமாக கிடைக்கும். அதிமுக மாநாட்டுக்கு வந்தவர்கள் பெரும்பாலோனோர் அழைத்து வரபட்டவர்கள் என நான் பேசாத செய்திகளை பத்திரிகையில் போடுகின்றனர். எந்த காலத்திலும் ஒரு கட்சியை பிரித்து, கட்சியை வளர்க்க வேண்டும் என நினைத்ததில்லை. பின்னால் பேசும் பழக்கம் எனக்கில்லை. எதையும் நேரடியாக பேசுவேன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என்றால், 1967 வரை ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடந்தது. 105 முறை மக்களால் தேர்வு செய்த அரசுகளை காங்கிரஸ் கலைத்துள்ளது. பாஜக பிரமுகர்களை குறிவைத்து திமுக கூலிப்படைகளை ஏவி விடுகிறது.” என்றார்.
தொடர்ந்து சீமானின் சவால் குறித்து பேசிய அண்ணாமலை, “சீமானின் சவாலுக்கு தயார். நாம் தமிழர் கட்சியை விட 30% அதிகமாக பாஜகவால் ஓட்டு வாங்க முடியும். சீமானை யாரும் சேர்த்து கொள்ளவில்லை. அதனால் அவர் தனியாக போட்டியிடுகிறார். தேர்தல் அறிக்கையில் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பதாக சொன்ன திமுக அதை செய்யவில்லை. தமிழகத்தில் 39 இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

பாஜக 25 இடங்களில் போட்டி என சொல்லி இருக்கிறேன். அது கட்சிக்கு நாங்கள் வைத்துள்ள டார்கெட். மாநில தலைவராக கட்சியை வளர்ப்பது என் கடமை. 25 இடங்களில் ஜெயிக்கும் அளவுக்கு கட்சியை தயார்படுத்தி வைத்திருக்கிறோம், கூட்டணி கட்சி நின்றாலும் மகிழ்ச்சி.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com