Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று மாலை 6.00 மணி முதல் தொடங்க இருக்கிறது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றில்லை இரண்டு வீடுகள் என்று ப்ரமோவில் கூறப்பட்டது. இதனால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில்மோதாம் 18 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றும், அதில் 9 ஆண் போட்டியாளர்களும் 9 பெண் போட்டியாளர்களும் பங்கேற்கவுள்ளனர். அதனை படி இந்த முறை கலந்துகொள்ளும் போட்டியாளர்களை நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூல் சுரேஷ்.
- யுகேந்திரன் (மறைந்த பாடகர் மலேசிய வாசுதேவனின் மகன்)
- விஷ்ணு (சத்யா, ஆபீஸ் தொடர்களின் நாயகன்)
- பிரதீப் ஆண்டனி (நடிகர் கவினின் நண்பர் மற்றும் நடிகர்)
- மணி சந்திரா (டான்ஸ் மாஸ்டர்)
- சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர்)
- பாவா செல்லதுரை (புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் குணச்சித்திர நடிகர்)
- நிக்சன் (ராப் பாடகர்)
- விஜய் வர்மா (மாடலிங்)
- பூர்ணிமா ரவி (யூடியூபர்)
- மாயா கிருஷ்ணன் (நடிகை)
- ஜோவிகா (நடிகை வனிதா விஜயகுமாரின் மூத்த மகள்)
- அக்ஷயா உதயகுமார் (நடிகை)
- வினுஷா தேவி (பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை)
- விசித்ரா (நடிகை)
- ரவீனா (தொலைக்காட்சி நடிகை)
- ஐஷூ (முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் அமீரின் தங்கை மற்றும் நடனக் கலைஞர்)
- அனன்யா ராவ் (மாடலிங்).
மேலும் முழு போட்டியாளரின் விவ்ரங்கள் இன்று இரவுக்குள் அதிகார்பூர்வமாக தெரியவரும்.
The post பிக்பாஸ் சீசன் 7: மொத்தம் 18 போட்டியாளர்கள்… வெளியான இறுதி லிஸ்ட்…! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
