”என்கிட்டயா லஞ்சம் கேட்குறீங்க”..!! வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஷால்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

”என்கிட்டயா லஞ்சம் கேட்குறீங்க”..!! வசமாக மாட்டிவிட்ட நடிகர் விஷால்..!! மத்திய அரசு அதிரடி உத்தரவு..!!

திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு, லஞ்சம் வாங்கியதாக விஷால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

விஷால் சொல்லியிருந்தது என்னவென்றால் ? CBFC என்று சொல்லப்படக்கூடிய திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பு, சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய படத்திற்கு அவரே லஞ்சம் கொடுக்க வேண்டியது இருந்தது குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தான் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மும்பைக்கு ஒரு அதிகாரியை அனுப்பி இன்றே விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இதே போல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த தகவல் இருந்தாலும் அதை தெரிவிக்கும்படியும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த படம் மட்டுமல்லாமல் வேறு இதுபோன்று ஊழல் விவகாரங்கள் இருந்தாலும் அதிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணை நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, CBFC விவகாரத்தை விஷால் தெரிவித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சகம், இது மிகவும் வருத்தத்தக்க விஷயம் என்றும், துரதிஷ்டவசமான இந்த குற்றச்சாட்டு மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எந்த விதமான ஊழலையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *