வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை இரவு சுமார் 8 மணியளவில் சீருடை அணிந்த அதிகாரியை கமாண்டர் கடித்திருக்கிறது. மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அந்த அதிகாரிக்குச் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று அறிவித்துள்ளனர்.
ஜோ பைடனின் வளர்ப்பு நாயான கமாண்டர் இது போல பணியில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரியைக் கடிப்பது முதல் முறையல்ல. தொடர்ச்சியாக பாதுகாப்பு பணியில் இருக்கும் பல அதிகாரிகளைக் கடித்து இருக்கிறது.
வெள்ளை மாளிகையில் இருக்கும் அதிபர், அவரின் குடும்பத்தினர் மற்றும் பிற அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுபவர்களே `சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள்’ (Secret Service employee) . இவர்கள் வெள்ளை மாளிகையின் பல இடங்களிலும் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தான், `கமாண்டர்’ ஓர் அதிகாரியைக் கடித்திருக்கிறது.
பைடனை பொறுத்தமட்டில் அவரின் வளர்ப்பு நாயை குடும்ப உறுப்பினராகவே கருதுகிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
