Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
உடல் பருமன் அல்லது கூடுதல் எடை கொண்ட நபர்கள் எடை குறைப்பில் இறங்கும்போது அவர்களுக்கு எழும் முதல் கவலையே வயிற்று பகுதியில் குவிந்திருக்கும் தொப்பை தான். ஏனென்றால், தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டாலும் கூட பலருக்கு தொப்பை அவ்வளவு எளிதில் குறையாது. அதே போல தங்கள் உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள விரும்புபவர்கள் பெரிய கைகள், அகலமான தோள்பட்டை மற்றும் உறுதியான கால்களை உருவாக்க விரும்புவதோடு தொப்பையின்றி வயிற்றை வைத்து கொள்ள குறிப்பாக சிக்ஸ் பேக்கிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) : இது ஒரு சிறந்த ஏரோபிக் உடற்பயிற்சியாக இருக்கிறது. இது உடலில் இருக்கும் கலோரிகளை கணிசமாக எரிக்கிறது. ஜம்பிங் ஜாக்ஸை நீங்கள் முயற்சி செய்து பார்க்க கூடிய வகையில் பலவித வேரியேஷன்கள் இருக்கின்றன என்பது கூடுதல் நன்மை.
ஸ்டாண்டிங் பைசைக்கிள் க்ரஞ்சஸ் (Standing Bicycle Crunches) : இதை தொடர்ந்து செய்வது வயிற்றில் குவிந்திருக்கும் தொப்பையை குறைக்க உதவுகிறது. இந்த பயிற்சி கிளாசிக் க்ரஞ்ச்ஸ் பயிற்சிக்கு ஒரு சிறந்த மாற்றாகும். மேலும், இந்த பயிற்சி உங்கள் entire core-யும் டார்கெட்டாக கொண்டது.
சைட் லெக் ரெய்சஸ் (Side Leg Raises) : இது நின்று கொண்டே கால்களை பக்கவாட்டில் உயர்த்தி செய்ய கூடிய பயிற்சியாகும். விலா எலும்புகள், மேல் இடுப்பு எலும்பு மற்றும் கீழ் முதுகு உள்ளிட்டவற்றை இணைக்கும் oblique muscles-ஐ டார்கெட் செய்து இடுப்பு மற்றும் வயிறு பகுதியை டோன் செய்ய உதவும்.
டார்சோ ட்விஸ்ட்ஸ் (Torso Twists) : இந்த பயிற்சி உங்கள் வயிற்றின் நடுப்பகுதியில் குவிந்திருக்கும் கொழுப்பான தொப்பையை குறைக்க உதவுகிறது. நின்று கொண்டே இரு கைகளையும் இடுப்பின் பக்கவாட்டில் வைத்து உடலை இடது மற்றும் வலது என மாறி மாறி ட்விஸ்ட் செய்வது இடுப்பு பகுதியையும் ஃபிட்டாக வைக்க உதவுகிறது.
ஹை நீஸ் (High Knees) : இது ஒரே இடத்தில் நின்றபடியே இரு முழங்கால்களையும் உயர்த்தி செய்ய கூடிய உடற்பயிற்சியாகும். இது கொழுப்பை எரிக்க உதவும் சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. இந்த பயிற்சியானது இதய துடிப்பை அதிகரிக்கிறது. மேலும், இரு முழங்கால்களையும் மாறி மாறி மார்பு உயரத்திற்கு தூக்குவதால் வயிறு மற்றும் இடுப்பை சுற்றியுள்ள கொழுப்பு கணிசமான அளவில் எரிகிறது.
ஸ்குவாட் ஜம்ப்ஸ் (Squat Jumps) : இது ஹை-இன்டென்சிட்டி கொண்ட உடற்பயிற்சியாகும். இது வயிற்று பகுதியில் இருக்கும் தொப்பையை கரைப்பது மட்டுமின்றி, லோயர் பாடி ஸ்ட்ரென்த்தை உருவாக்குகிறது. தொப்பையை குறைக்க வேண்டும் எனில் மேற்கண்ட பயிற்சிகளோடு, சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம்.
The post உடல் அழகையே கெடுக்கும் தொப்பை..!! விரைவில் குறைப்பது எப்படி..? சூப்பர் டிப்ஸ்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com