கடந்த ஆண்டு மே மாதம், அஸ்ஸாமில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் தங்களது உடலை ஃபிட்டாக வைத்து, ஆகஸ்ட் 15-ல் நடைபெற உள்ள பிஎம்ஐ சோதனையில் பங்குகொள்ளுமாறு கூறப்பட்டது. இதற்காக காவல்துறையினருக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாத முதல் சுற்று பிஎம்ஐ சோதனையில், மொத்த காவல் அதிகாரிகளில் 97.53% பேர் தேர்ச்சியடைந்ததாகக் கூறப்பட்டது.
அந்தச் சோதனையில் 30-க்கும் அதிகமான பிஎம்ஐ உள்ள காவல்துறையினருக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. அடுத்தகட்ட இரண்டாவது சுற்று சோதனை ஜனவரி 2024-ல் நடக்கும் என்றும், அந்த உடற்தகுதியில் தேர்ச்சி பெற வேண்டும் எனக் கூறப்பட்டு இருந்தது.
தைராய்டு போன்ற உடல்நலக் குறைபாடு உள்ளவர்களைத் தவிர்த்து, உடல்தகுதி சோதனையில் காவல்துறையினர் தோல்வியடையும்பட்சத்தில், வேலையை விட்டு அவர்களாகவே நீங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இரண்டாவது சுற்று பிஎம்ஐ சோதனை தொடங்கியுள்ளது.
2023 செப்டம்பர் மாதம், `உடல்பருமனானவர்கள் என வகைப்படுத்தப்பட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் இரண்டாவது சுற்று சோதனைகளுக்கு முன், இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ வசதிகளையும் தேவைப்படும் பட்சத்தில் அளிப்போம்” என அம்மாநில டிஜிபி ஞானேந்திர பிரதாப் சிங் கூறியிருந்தார்.
தமிழகத்திலும் போலீசாருக்கு இதுபோன்ற பிஎம்ஐ சோதனை அவசியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?… கமென்டில் சொல்லுங்கள்!
நன்றி
Publisher: www.vikatan.com
