மேலும், மற்றொரு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், “மல்யுத்த வீராங்கனைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவரின் நண்பரே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இனியும் பாலியல் தொல்லை தொடரும். நாட்டில், நீதியை எங்கு பெறுவதென்றே தெரியவில்லை. எங்கு சொல்வதென்றே தெரியவில்லை” என்று செய்தியாளர்கள் முன்னிலையில் கண்ணீர்விட்டார்.


பஜ்ரங் புனியா அந்தக் கடிதத்தில், “பிரதமரே நீங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நிறைய வேலைகளில் நீங்கள் பிஸியாக இருப்பீர்கள். இருந்தாலும், இந்த நாட்டின் மல்யுத்த வீரர், வீராங்கனைகள்மீது உங்கள் கவனம் திரும்ப இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். இந்த ஆண்டு ஜனவரியில், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தியதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அதில் நானும் கலந்துகொண்டேன். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் கூறியபிறகே, நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால், அடுத்த மூன்று மாதங்களுக்கு பிரிஜ் பூஷன் மீது எஃப்.ஐ.ஆர்கூட போடவில்லை. மீண்டும், ஏப்ரலில் சாலைகளில் போராட்டத்தில் இறங்கினோம். அதன்பிறகு குறைந்தபட்சமாக, அவர்மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். ஜனவரியில், பிரிஜ் பூஷன் மல்யுத்த வீராங்கனைகள் 19 பேர் புகாரளித்திருந்தார்கள். ஆனால், ஏப்ரலில் அது ஏழாகக் குறைந்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், 12 வீராங்கனைகள்மீது பிரிஜ் பூஷன் தனது அதிகாரத்தைச் செலுத்தியிருக்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதோடு, பத்மஸ்ரீ விருதைத் திருப்பித்தர டெல்லியிலுள்ள பிரதமர் இல்லத்துக்கும் பஜ்ரங் புனியா சென்றார். ஆனால், போலீஸார் அவரை இடைமறித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
