ஆட்டோ 40, பைக் 50, கார் 60..! போக்குவரத்து காவல் துறை புதிய அறிவிப்பு..! நவம்பர் 4 முதல்…

ஆட்டோ 40, பைக் 50, கார் 60..! போக்குவரத்து காவல் துறை புதிய அறிவிப்பு..! நவம்பர் 4 முதல்…

விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. இந்நிலையில் எந்தெந்த வாகனங்கள் என்ன வேகத்தில் செல்லலாம் என்பது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆட்டோக்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அதுபோல இருச்சக்கர வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இலகுரக வாகனங்கள் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும், கனரக வாகனங்கள் 50 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வாகனங்களும் 30 கி.மீ வேகம் வரை மட்டுமே செல்ல வேண்டும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விதிகள் நவ.4ஆம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வரும் பட்சத்தில், விதிகளை மீறும் வாகனங்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மற்றும் அபிராத்தனைகள் விதிக்கப்படும் என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *