தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பல பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றி, அவர்களை மோசடி செய்த ஒரு நபர், தற்போது அந்த வரிசையில் ஐந்தாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அவரிடம் சிக்கிக் கொண்ட அந்த மோசடி ஆசாமி, தற்போது சிறையில் உள்ளார்.
கோவை மாவட்டம் வேடப்பட்டி சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில், ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பார்த்திபன் (38) என்பவருக்கும், தனக்கும் மேட்ரிமோனியல் மூலமாக திருமணம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், சில மாதங்கள் அவருடன் வாழ்ந்த பிறகுதான், அவருடைய பல மோசடிகள் குறித்து தெரிய வந்துள்ளதாக, அவர் அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு, கேரளா என்று பல மாநிலங்களில் ஐந்து பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவற்றை ஏமாற்றி, மோசடி செய்தார் என்பதும் தெரிய வந்தது. அத்துடன், அவர் மீது போக்சோ வழக்கு நிலுவையில் இருப்பது தெரிந்ததால், அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அவருடைய உண்மை முகத்தை அறிந்த பிறகு, தன்னுடைய கணவரை விட்டு விலகி விட்டதாகவும், ஆனாலும், தன்னிடம் வாங்கிய 40 லட்சம் ரூபாய் பணம் மற்றும் திருமணத்தின்போது வழங்கிய நகைகளை கொடுக்காமல், அவர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அந்த பெண்மணி. அத்துடன் அவர் மீது மட்டுமல்லாமல், அவருக்கு துணையாக இருக்கும் அவருடைய தாய், தந்தை மீதும், வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், அந்த புகார் மனுவின் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார் அந்த பெண்மணி. அவருடைய இந்த புகார் மனுவை அடிப்படையாகக் கொண்டு, பார்த்திபன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீதும், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
.
நன்றி
Publisher: 1newsnation.com