உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரானது கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி குஜராத்தில் தொடங்கப்பட்டது. இந்த உலக கோப்பை தொடரானது மொத்தம் 48 நாட்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் 10 அணிகள் போட்டியிட உள்ளனர். உலக கோப்பை தொடரின் முதல் போட்டியானது இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில், நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், உலக கோப்பை தொடரின் அடுத்த போட்டியானது இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நாளை(அக்டோபர் 8) சென்னையில் உள்ள சேப்பாக்க மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியை கான பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதனால் அந்த அப்பகுதிகளில் பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், மைதானத்திற்கு வருகை தரும் ரசிகர்கள் இரண்டு கட்ட பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சேப்பாக்க மைதானத்தில் அக்டோபர் 13,18, 23 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சேப்பாக்க பகிதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேப்பாக்க பகுதிகளில் நாளை நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் இருக்கும் முக்கிய சாலையான பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், கண்ணகி சிலை பகுதியில் இருந்து வரும் மாநகரப் பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்லாது எனவும், இந்த பேருந்துகள் அனைத்தும் ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை வழியாக அனுப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
எனவே, சேப்பாக்க மைதானத்திற்கு வரும் ரசிகர்கள் வாகனம் வைத்திருந்தால் அதற்கான அனுமதி பெற்றிருந்தால மட்டுமே அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த முடியும். அனுமதி பெறாத ரசிகர்கள் தங்களின் வாகனங்களை மெரினா கடற்கரையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in
