சென்னையில் தொழில் தொடங்க போறீங்களா..? மானியத்துடன் கூடிய அரசு வழங்கும் கடனுதவி பற்றி தெரியுமா..?

சென்னையில் தொழில் தொடங்க போறீங்களா..? மானியத்துடன் கூடிய அரசு வழங்கும் கடனுதவி பற்றி தெரியுமா..?

சென்னையில் பில்டர் காஃபி நிலையம் அமைக்க மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினவர்கள் பல்வேறு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த கடன்களுக்கு மானியமும் வழங்கப்படுகிறது. உதாரணமாக 5 லட்சம் கடன் வாங்கினால் அதில் 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கட்டத்தேவையில்லை.

இப்படி பல்வேறு கடன் உதவிகளை பட்டியல் இனத்தவர்கள் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படுகிறது. எனவே, தாட்கோவில் சென்று உங்கள் ஊரில் என்ன மாதிரியான தொழில் தொடங்க கடன் தருகிறார்கள். அந்த கடன் பெற என்ன தகுதி வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, கடன் வாங்கி தொழில் தொடங்கி முன்னேறலாம்.

பில்டர் காஃபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படுவது குறித்து அரசு அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பினை இப்போது பார்ப்போம். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும் . இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன்
www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை வழங்கப்படும். இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம், பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகையை வங்கியில் கடனுதவியாக பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *