மாணவர்களே ரெடியா..? மருத்துவ காலியிடங்கள்..!! கலந்தாய்வு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

மாணவர்களே ரெடியா..? மருத்துவ காலியிடங்கள்..!! கலந்தாய்வு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றுக்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை.

இதை வீணாகாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.

அதன்படி, மத்திய அரசு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *