மதுரை சமூக நல அலுவலகத்தில் இளநிலை உதவியாளருக்கு விண்ணப்பிக்கலாம் என்று சமூக நல அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
“மதுரை சமூக நல அலுவலகத்தில் ஒரு இளநிலை உதவியாளர், தட்டச்சர் பதவிகளுக்கு ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் மாத தொகுப்பு ஊதியமாக ரூபாய் 12,000 சம்பளத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது .
வயது வரம்பு, தகுதி :
இப்பதவிக்கு வயது வரம்பு 20 முதல் 35க்குள் இருப்பதுடன், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை தவிர தட்டச்சியில் தமிழ், ஆங்கிலம் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கணினி பயன்பாடு அறிந்தவராக இருக்க வேண்டும் என்றும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்ப வேண்டிய முகவரி :
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மாவட்ட சமூக நல அலுவலர் சமூக நலம் மகளிர் உரிமை துறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மதுரை 20.
கடைசி நாள் :
இப் பதவியில் சேர விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 7ம் தேதி” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com