ஆப்கானிஸ்தான் மேற்கு ஹெராத் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் கடந்த 9 நாட்களில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம். வடமேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் இந்த நிலநடுக்கமானது ஹெராட் நகரின் வடமேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றிய தகவல் இதுவரை வெளிவரவில்லை.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மேலும் நிலநடுக்கம் ஏற்படுவது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 90% க்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநாவின் குழந்தைகள் நிறுவனம் யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
Also Read : லியோ படத்த பாக்க போறீங்களா..? அப்போ முதல் 10 நிமிஷத்த மட்டும் மிஸ் பண்ணிடாதிங்க… சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!
முன்னதாக கடந்த வாரம் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதை தொடர்ந்து மேலும் 6.3, 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவில் மூன்று நிலநடுக்கங்களும் உணரப்பட்டது. மேலும் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹெராத் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவிகளை வழங்குவதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கங்கள் (IFRC) தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. அதை தொடர்ந்து ஆப்கான் ரெட் கிரசண்ட் சொசைட்டியும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
நன்றி
Publisher: jobstamil.in
