

நம்மிடம் பேசிய சமூக செயற்பாட்டாளர்கள் சிலர், “வலதுசாரி அமைப்புகள் மட்டுமின்றி பொதுவாக வட இந்தியர்களுக்கே ராமர்மீது உணர்வுமிக்க பக்தி உண்டு. எனவே ராமர் குறித்து கருத்துக்கு அவர்கள் கொதிப்பது ஒன்றும் ஆச்சரியம் அல்ல. படத்தை நெட்ஃபிளிக்ஸ் நீக்கியதே அதிர்ச்சிகரமானது என்றவர்களிடம் பின்னணி குறித்து கேட்டோம் “ஓடிடி தளங்கள் மதம் சார்ந்தோ, மிரட்டல்களுக்கு அஞ்சியோ படத்தை நீக்கவில்லை, இதன்பின்னே இருப்பது வியாபாரம் மட்டும்தான். இந்தியாவில் சுமார் 60 லட்சம் சப்ஸ்கிரிப்ஷன்களை கொண்டிருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். இதில் வட இந்தியர்கள் மற்றும் இந்தி படங்களுக்கான ரசிகர்களே அதிகம். ராமர் குறித்த சர்ச்சைகள் எழுந்தபின்னரும் அதன்மீது நடவடிக்கை எடுக்காமலிருந்து நெட்ஃபிளிக்ஸ் புறக்கணிப்பு பிரச்சாரத்தை அமைப்புகள் தொடங்கிவிட்டால் வணிக ரீதியான பின்னடைவை நிறுவனம் சந்திக்க நேரிடும். எனவே இம்முறை எடுத்திருக்கிறது. மேலும் சர்ச்சை கருத்தை நீக்கி படத்தை மீண்டும் திரையிடவும் திட்டமிடுகிறது ஓடிடி தளம்” என்றனர்.


நம்மிடம் பேசிய இயக்குநரும் மாநீம நிர்வாகியுமான முரளி அப்பாஸ், “கலை மீதான சமூக அத்துமீறலாக இதனை பார்க்கிறேன். ஒருபடம் சென்சார் போர்ட்டை கடந்து ஓடிடியில் வெளியான பின் நீக்கப்படுகிறதென்றால் இனி என்ன மாதிரியான படம் எடுக்க வேண்டும் என்பதையும் ஒருசாரார்தான் தீர்மானிப்பார்களா என்ற அச்சம் ஏற்படுகிறது. படைப்பு மட்டும்தான் எதையும் கேள்வி கேட்க முடியும். ஆனால் படைப்பு சுதந்திரத்துக்கே நெருக்கடியாக கருதுகிறேன், இதுவொரு தவறான முன்னுதாரணமாக போய்விடக் கூடாது” என்றார் காட்டமாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com