இந்தியா கூட்டணியில் தி.மு.க இடம் பெற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்துக்கு சென்று விட்டு காவிரி குறித்து வாயைத் திறக்காமல் வந்தார். மாநில அரசு காவிரியில் தண்ணீரைப் பெற்றுத் தராததால் மகசூல் குறைந்து விட்டது, கொள்முதலும் குறைந்துவிட்டது. கடந்த 1924-ம் ஆண்டு போடப்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 1974-ம் ஆண்டு கருணாநிதி புதுப்பிக்கத் தவறினார். இதனால் கர்நாடகத்தில் ஹேமாவதி, கபினி என வரிசையாக அணை கட்டப்பட்டது. எனவே, கடந்த 80 ஆண்டுகளாக காவிரியில் அரசியல் காரணங்களுக்காக நிறைய விஷயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது.

இதனால் காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து, குறைந்து தரிசு நிலம் அதிகமாகிவிட்டது. காவிரியில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நம்முடைய உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. இதனால், காவிரியில் வரக்கூடிய தண்ணீரின் அளவு குறைந்து, நிகழாண்டு நெல் கொள்முதல் 3 லட்சம் டன் குறைந்துவிட்டது” என்றார்.
இதனை தொடர்ந்து நடைப்பயணம் மேற்கொண்ட அவர், கருப்பூரில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுடன் சேர்ந்து நடவு செய்தார். அப்போது அப்பெண்கள் அண்ணாமலைக்கு ஆரத்தி எடுத்தனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
