உயரத்தின் அடிப்படையில் ஹைதராபாத்திலிருக்கும் அம்பேத்கர் சிலையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளி, உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலையாக உருவாகியிருக்கும் இந்த சிலைக்கு `சமூக நீதியின் சிலை (Statue of Social Justice)” எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், 400 டன் எஃகு கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மாநாட்டு அரங்கம், உள் அரங்கம், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூலகம், அருங்காட்சியகம் உள்ளடக்கிய அம்பேத்கர் ஸ்மிருதி வனம் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிலை, அம்பேத்கர் ஸ்மிருதி வனம் ஆகியவை மொத்தமாக ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை (ஜனவரி 19) திறந்துவைக்கிறார். இதுகுறித்து, ஜெகன்மோகன் ரெட்டி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “சமூக நீதியின் சின்னம்… ஆந்திராவின் பெருமை… ஜனவரி 19-ல் அம்பேத்கரைக் கவுரவிக்கும் இந்த வரலாற்று நினைவுச் சின்னத்தின் திறப்பு விழாவில் எங்களுடன் கலந்துகொள்ளுங்கள். இது, நம்முடைய அரசில் அடையப்பட்ட சீர்திருத்த சமூக நீதியின் உண்மையான பிரதிநிதித்துவ நினைவுச் சின்னம்” எனக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றவை நேற்று பதிவிட்டிருந்தார்.
மேலும், அந்த வீடியோவில், “ஒடுக்கப்பட்டோருக்கு கல்வியைக் கொண்டு சேர்ந்து, தீண்டாமை மற்றும் ஆதிக்க சித்தாந்தத்துக்கு எதிராக அம்பேத்கர் புரட்சி செய்தார். ஒவ்வொரு குக்கிராமத்திலும் இருக்கும் அம்பேத்கர் சிலைகள், நலிந்த பிரிவினருக்குத் தொடர்ச்சியான நம்பிக்கையையும், ஆதரவையும் தைரியத்தையும், அளிக்கும் உத்வேகமாக செயல்பட்டது. கடந்த 77 ஆண்டுகளில் சாதி, மதம் எந்தவொரு வேறுபாடுமின்றி தலித்துகள் மற்றும் ஏழைகளின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அம்பேத்கரின் சித்தாந்தமே அடிப்படையாக இருப்பதால் நாம் அனைவரும் அவரை கவுரவிக்கிறோம்” என்று ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
