கட்சியின் விவகாரம் குறித்து வேறு யாரும் எதுவும் சொல்ல அனுமதிக்கப்படவில்லை. 2018 மற்றும் 2022ம் ஆண்டில் கட்சியின் நிர்வாகத் தேர்தல் நடந்ததாக சொல்லப்பட்டாலும், அப்படி ஒன்று நடக்கவேயில்லை. தேர்தல் நடத்த எந்தவித கூட்டமும் நடந்ததாக காட்டவே இல்லை. எனவே தேர்தல் நடந்ததாக கூறப்படுவது தவறானது. மாநில தலைவர்கள், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.

ஆனால் சரத் பவார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் தானே நியமித்து விடுவார். கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அஜித் பவார் முறைப்படி கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது குறித்து தேர்தல் கமிஷனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது”‘ என்று குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பினரின் மனுக்கள்மீது சபாநாயகர் அடுத்த வாரம் விசாரணை நடத்த இருக்கிறார். ஏற்கெனவே சிவசேனா எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு மனுக்கள் மீது சமீபத்தில்தான் விசாரித்து, சபாநாயகர் முடிவை அறிவித்தார்.
நன்றி
Publisher: www.vikatan.com
