அதிரடி…! TNPSC தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62…! தமிழக அரசின் கோப்புகளை மீண்டும் திருப்பிய ஆளுநர்…!

அதிரடி…! TNPSC தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62…!  தமிழக அரசின் கோப்புகளை  மீண்டும் திருப்பிய ஆளுநர்…!

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி 2வது முறையாக திருப்பி அனுப்பினார். டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றவில்லை என கூறி திருப்பி அனுப்பினார். நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை தமிழக அரசிடம் ஆளுநர் ரவி கேட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு தமிழக டிஜிபியாக சைலேந்திரபாபும், தலைமைச் செயலாளராக இறையன்பு இருவரையும் திமுக அரசு நியமனம் செய்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஜிபியாக பதவியை வகித்து வந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் மாதத்துடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர், மாணவர்களுக்கு இலவச பயிற்சி மையங்களை நடத்தி வருகிறார். அவரது பெயர் டிஎன்பிஎஸ்சி தலைவர் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில் ஆளுநர் அவரது நியமனத்தை நிராகரித்து இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு இருந்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62 என உள்ள போது 61 வயதான சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய முடியாது என அரசின் கோப்பை 2வது முறையாக மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *