இதற்கிடையில், `வன்முறையைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்தபோது, “கலவரத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தான் முதல்வர் பதவி விலகவேண்டும். ஆனால், பிரேன் சிங் மத்திய ஒத்துழைக்கிறார்” என்று அமித் ஷா கூறினார்.
இந்த நிலையில், நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திக்கச் சென்ற பிரேன் சிங், மோடி மற்றும் அமித் ஷாவின் அறிக்கைகளைக் கேட்ட பிறகு மணிப்பூரில் அமைதி நிலவுவதாகக் கூறியிருக்கிறார்.

அமித் ஷாவுடனான சந்திப்புக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேன் சிங், “உள்துறை அமைச்சரின் ஆலோசனையைப் பெறுவதற்காக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு மற்றும் குடியேற்றத்துக்கான வழக்கமான பணி இது. நாடாளுமன்றத்தில் மோடி, அமித் ஷாவின் அறிக்கைகளைக் கேட்ட பிறகு மணிப்பூரில் அமைதி நிலவுகிறது” என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, “இந்தியாவில் முஸ்லிம்களும், மணிப்பூர் மக்களும் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்” என்று லடாக்கில் ராகுல் காந்தி கூறியது குறித்துப் பேசிய பிரேன் சிங், “லடாக் போகிறீர்கள் என்றால் லடாக்கைப் பற்றி பேசுங்கள். இன்று மணிப்பூரில் நடப்பதெல்லாம் காங்கிரஸ் உருவாக்கி வைத்தது. மனித உயிர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
