அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் வி.சி.க… திமுகவுக்கு `செக்’ வைக்கும் திருமா..!?

அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் வி.சி.க… திமுகவுக்கு `செக்’ வைக்கும் திருமா..!?

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் உடல்நலம் குறித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் பாஜகவுடனான உறவை அதிமுக முறித்துக் கொண்டது. இது அரசியல் களத்தில் பரபரப்பையும், பல்வேறு யூகங்களையும் கிளப்பி விட்டிருக்கிறது. ஏற்கனவே, பெரியண்ணன் போக்கில் நடந்து கொள்வதாக திமுக மீது விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் முணுமுணுத்து வரும் வேளையில், பாஜகவை அதிமுக கழற்றி விட்டிருப்பது அந்த கட்சிகளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காரணம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக குறைந்த எண்ணிக்கையில் சீட் வழங்க முன்வந்தால், அப்போது அதிமுக பக்கம் திரும்ப நேரிடும் என்று எச்சரித்து, செக் வைக்க திமுக அணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அதேநேரம், பாஜக இல்லாத சூழலில் தனது அணியை வலுப்படுத்த விரும்பும் அதிமுக, தற்போது விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுடன் நெருக்கத்தைக் காட்ட விரும்புகிறது. அப்போதுதான் திமுக அணியை பலவீனப்படுத்த முடியும் என்பது அதிமுக போடும் கணக்கு.

இந்த நிலையில், காய்ச்சல் காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல் நலம் குறித்து அக்கறையோடு விசாரித்தார். எடப்பாடியாரின் கனிவான பேச்சால் திருமாவளவன் நெகிழ்ந்து போய்விட்டாராம்.

அரசியல் தலைவர்கள் பரஸ்பரம் உடல் நலம் விசாரித்துக் கொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பாஜகவை புறந்தள்ளிவிட்டு கூட்டணியை வலுப்படுத்தும் முனைப்பில் உள்ள அதிமுக, திடீரென விசிகவுடன் நெருக்கம் காட்டுவது திமுக வட்டாரங்களில் உற்று நோக்கப்படுகிறது.

இப்போது திமுக அணியில் விசிக இடம் பெற்றிருந்தாலும், தேர்தல் அறிவிப்பு வந்தபிறகு தொகுதி எண்ணிக்கை, ஒதுக்கீடு விஷயங்களில் பெரியண்ணன் போக்குடன் திமுக கெடுபிடி காட்டினால், ஒருவேளை அதிமுக பக்கம் சாய்வோம் என்று செக் வைக்க, விசிக-வுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The post அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் வி.சி.க… திமுகவுக்கு `செக்’ வைக்கும் திருமா..!? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *