தமிழக அரசின் 100 நாள் வேலை திட்டம் நிதி பற்றாக்குறை காரணத்தால் முடங்க உள்ளதாக அரசு தரப்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

100 நாள் வேலை திட்டம்:
நமது தமிழக அரசு கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எண்ணத்தில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டம் மக்களிடம் பெரிதும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் பயன் பெற்றுள்ளது.
தற்போது 100 நாள் வேலை திட்டத்தில் ஊழியர்களுக்கு சரியான சம்பளம் வழங்குவதில்லை என்றும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லை என்றும் ஊழியர்கள் சிரமப்பட்டு வந்தனர். அதோடு ஒரு சில இடங்களில் ஊழியர்கள் சரியாக வேலைக்கு வராமல் சம்பளத்தை மட்டும் வாங்கி செல்வதாகவும் புகார்கள் வந்துள்ளது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 நாள் வேலை திட்டம் முடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read >> உங்க பட்ஜெட்ல மொபைல் வாங்கனுமா? அட்டகாசமான வசதியுடன் Motorola வின் Edge 40 Neo போன்…!
மேலும், சென்ற ஆண்டு 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.89,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் காரணமாக 100 நாள் வேலைத் திட்டம் முடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவை இருப்பின் அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக பல குடும்பங்கள் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென 100 நாள் வேலை திட்டத்தை முடக்கினால் லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசு இதனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்குமாறு ஊழியர்கள் தரப்பில் இருந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in