நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் பா.ஜ.க, வெற்றியை நோக்கி நகர்கிறது.
பா.ஜ.க தற்போது ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசம் மட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சி அமைக்க இருக்கிறது. இது பா.ஜ.க-வின் மகத்தான வெற்றியின் போக்கை காட்டுகிறது.

இந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், தனது ட்விட்டர் X கணக்கில், காங்கிரஸை கேலி செய்ததோடு, தேர்தலில் பா.ஜ.க-வின் மகிழ்ச்சியை உறுதி செய்ததற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ட்விட்டர் எக்ஸில் அவர், “சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால், அதற்கான விளைவுகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். மகத்தான வெற்றியை பெற்ற பா.ஜ.க-விற்கு வாழ்த்துகள். பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோரின் தலைமைத்துவத்திற்கும் அடிமட்ட அளவில் தொண்டர்களின் சிறப்பான பணிக்கும் இது மற்றொரு சாட்சியாகும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
