சனாதன ஒழிப்பு..!! உதயநிதியின் கன்னத்தில் செருப்பால் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு..!! அறிவித்தது யார் தெரியுமா..?

சனாதன ஒழிப்பு..!! உதயநிதியின் கன்னத்தில் செருப்பால் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு..!! அறிவித்தது யார் தெரியுமா..?

சனாதனத்தை ஒழிப்போம் என சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கமிட்டார். அவரது இந்த முழக்கம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கூட சனாதனம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி தர வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த அகோரி சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டி சீவினால் ரூ.10 கோடி பரிசு தருவதாக அறிவித்தார். இதற்கு எனக்கு ரூ.10 சீப்பு போதும் தலையை சீவ என உதயநிதி பதிலடி கொடுத்தார். ஆனாலும் அடங்காத அயோத்தி சாமியார், உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டினால் மேலும் ரூ.10 கோடி தருவேன் என கொக்கரித்தார். அவருக்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உதயநிதிக்கு ஆதரவாக நின்றனர்.

இந்நிலையில், தற்போது ஆந்திர மாநிலம் விஜயவாடைச் சேர்ந்த “Jana Jagarana Samiti” என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் ரூ.10 லட்சம் பரிசு தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உதயநிதி ஸ்டாலின் படத்தையும் அவர் முகத்தில் காலணியால் அறைவது போன்ற படத்தையும் போட்டு விஜயவாடா தெருக்களில் அந்த கும்பல் போஸ்டர்களையும் ஒட்டியிருக்கிறது.


TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *