நடிகர் விஜய் தொடங்கிய புதிய கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி அறிமுகம்..! சற்றுமுன் வெளியான புதிய தகவல்!!

A new app has been introduced to add members to the new party started by actor Vijay

கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ் திரையுலகில் “இளைய தளபதி” என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் விஜய் கடந்த 2 ஆம் தேதி அறிவித்ததோடு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கோடி மற்றும் சின்னம் ஆகியவை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். விஜய் தொடங்கிய புதிய கட்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக விஜயின் ரசிகர்கள் பலரும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Also Read > பொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! தமிழகத்தில் திடீரென்று உயர்ந்த அரிசியின் விலை..!

இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாக பிரித்து அதற்கான பொறுப்புகள் வழங்க நடிகர் விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிய மாவட்டப் பொறுப்பாளார் மற்றும் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் நியமிப்பது குறித்த அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பொறுப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு அதில் உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *