காது, மூக்கில் வழிந்த ரத்தம்… மது போதையில் பட்டாசு வெடித்த கூலித் தொழிலாளி… நடந்தது என்ன.?

காது, மூக்கில் வழிந்த ரத்தம்… மது போதையில் பட்டாசு வெடித்த கூலித் தொழிலாளி… நடந்தது என்ன.?

ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலாஜி. இவர் திருப்பூரில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிகிறது.

இவர் விஜயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக வீட்டிற்கு செல்லாமல் விஜயமங்கலம் பகுதியில் உள்ள கடைகளில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மர்ம மரணம் தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர்.

காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் அவர் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது இறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்திற்கு முந்திய இரவு குடிபோதையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் படுகாயம் அடைந்து பாலாஜி உயிரிழந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *