Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஒருபுறம், மிகவும் பரபரப்பாக சென்று கொண்டிருக்க… டாஸ்குகளை பிக்பாஸ் நாளுக்கு நாள் கடுமையாக்கி கொண்டே செல்கிறார். இந்நிலையில், இன்று வெளியான புரோமோவில், யாரும் எதிர்பாராத விதமாக பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதனால், மாயா பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு செல்கிறார்.
இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் போட்டியாளர்களுக்குள் நடந்த போட்டியில் ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். எனவே, பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்களுக்கு இனி சாப்பாடு கிடையாது என பிக்பாஸ் அறிவித்தார். இதை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இணை பிரியாத தோழிகளாக வலம் வந்து கொண்டிருந்த, பூர்ணிமா மற்றும் மாயா இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது.
கிடைத்த கேப்பில் எல்லாம் கன்டென்ட் கொடுக்க நினைக்கும் மாயா, கிச்சனில் வந்து எனக்கு பசிக்குது சாப்பாடு வேண்டும் என கூறுகிறார். பின்னர் ஸ்மால் பாஸ் வீட்டினரை பார்த்து, நான் அங்கு வந்தால் உங்களுக்கு ஓகே என கேட்க, நிக்சன் வாங்க பார்த்துக்கலாம் என கூறுகிறார். இதனை எதிர்த்து பூர்ணிமா கேள்வி எழுப்புகிறார். அங்கிருந்து வரவங்கள உங்களால தடுக்க முடியாத அப்போ எங்க கிட்ட பேசாதீங்க என கூறுகிறார்.
ஒரு கட்டத்தில் பூர்ணிமா – மாயா இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. நான் என்னை பார்த்துக்கொள்ள தான் இங்க வந்துருக்கேன், உங்கள பாத்துக்குறது என் வேலை இல்லை என மூஞ்சில் அடித்தது போல் கூறுகிறார் மாயா. பின்னர் தனக்கு சோறு தான் முக்கியம் என, பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு மாயா தாவி உள்ளதால் வேறு ஏதாவது பிரச்சனை வெடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
The post பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..!! கோபத்தில் வெளியேறிய போட்டியாளர்..!! அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
