38 வயது பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் … நட்பாக பழகிய நபர் செய்த வன்கொடுமை.!

38 வயது பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம் … நட்பாக பழகிய நபர் செய்த வன்கொடுமை.!

மகாராஷ்டிரா மாநில தலைநகரமான மும்பையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்து காவல் துறை விசாரணை செய்து வருகிறது.

பெண் மருத்துவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் பேட்மிட்டன் விளையாடுவதற்காக கிளப்பிற்கு சென்றபோது அங்கு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் இந்த பழக்கம் நட்பாக மாறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மருத்துவரை சந்திப்பதற்காக அந்த நபர் பெண் மருத்துவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது போதைப் பொருள் கொடுத்து அந்தப் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண் மருத்துவர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விரைவாக நடவடிக்கையில் இறங்கி அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். நட்பு என்ற பெயரில் பெண் மருத்துவர் ஏமாற்றப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *