
குமரி மாவட்டம் முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக தற்பொழுது இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சிந்து இவர்கள் இருவருக்கும் ராஜீவ் மற்றும் அஜய் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், இளைய மகனான அஜய்(வயது 19) என்பவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எப்பொழுதும் போல இரவு அம்மா சிந்து பெரிய மகன் ராஜீவ் மற்றும் இளைய மகன் அஜய் மூவரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். மறுநாளான நேற்று காலையில் பெரிய மகனான ராஜீவ் வழக்கம் போல் எழுந்து வெளியே சென்று விட்டார். வீட்டில் அம்மாவும் இளைய மகனும் இருந்துள்ளனர். விடிந்து வெகுநேரமாகியும் இளைய மகன் அறையை திறக்காததால் சிந்து அறையை தட்டியுள்ளார். ஆனால் அறையின் கதவு திறக்காததாலும் உள்ளிருந்து எந்தவொரு பதிலும் வராததாலும் சந்தேகமடைந்த அம்மா சிந்து அருகில் இருப்பவர்களை வரவழைத்து ஜன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். உள்ளே பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உரைந்து நின்றனர்.
Also Read > பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..! இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரெடியா இருங்க…
இளைய மகனான அஜய் அறையில் உள்ள கொக்கி ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதனை பார்த்த உறவினர்கள் தூக்கில் தொங்கிய அஜயை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் அஜய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட தாய் சிந்து துடிதுடித்து போனார். இதுகுறித்து தாய் சிந்து போலீசில் புகார் தெரிவித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பொழுது அஜய்க்கு கணித பாடம் மிகவும் கடினமாக இருந்ததாவும் கல்லூரிக்கு செல்லவே பிடிக்கவில்லை எனபெற்றோரிடம் தெரிவித்தால் வெளிநாட்டில் இருக்கும் அப்பா கோபப்படுவார் என்றும் சித்தியிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
