நாட்டில் வருடம் தோறும் உண்டாகும் சாலை விபத்துக்களில் உண்டாகும் உயிரிழப்புகள் தொடர்பான தகவலை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சென்ற 2022 ஆம் வருடத்திற்கான விபத்து தொடர்பான விவரங்களை தற்போது மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1.68 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிகிறது. அதாவது, மூன்று நிமிடங்களுக்கு ஒருவர் வீதம் சாலை விபத்தில் நாள்தோறும் 462 உயிரிழப்புகள் ஏற்படுவதாக அந்த புள்ளி விவரம் கூறுகின்றது.
2023 ஆம் வருடத்திற்குள் நாட்டில் நடக்கும் விபத்துக்கள் பாதியாக குறைக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வருவது வேதனையான விஷயமாக மாறி உள்ளது. சென்ற 2021 ஆம் வருடத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, 2022 ஆம் ஆண்டு இறப்பு எண்ணிக்கை சற்றேற குறைய ஒன்பது சதவீதம் அதிகரித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு நோய் தொற்று பாதிப்புக்கு முந்தைய காலகட்டத்தில், சுமார் 11.5% என அதிகரித்து இருப்பதாக தெரிகிறது.
நன்றி
Publisher: 1newsnation.com
