அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் வேண்டுமென்றே கூறினார். வெறுக்கத்தக்க பேச்சு மட்டுமல்லாமல், தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் அவர் மறுத்துவிட்டார். மாறாக, சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து கூறுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் தன்னை நியாயப்படுத்தினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்து, அவரது கருத்துகளை நியாயப்படுத்த முடிவு செய்ததால், சட்டத்தின் ஆட்சி மேலும் சீர்குலைந்துவிட்டது. இந்த கருத்துக்கள் மறுக்கமுடியாத வகையில் இந்தியாவின் ஒரு பெரிய மக்கள்தொகைக்கு எதிரான வெறுப்பு பேச்சு, பாரதத்தை ஒரு மதசார்பற்ற தேசமாகக் கருதும் இந்திய அரசியலமைப்பைத் தாக்குகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
