காதல் வாழ்க்கை எப்படி?
உறவுகள், திருமணத்தை பார்த்தால், பெண் தேடுபவர்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இருக்கிறது. ஏழரையில் தான் பெரும்பாலும் திருமண பலன்கள் கிடைக்கும். ஆனால், 2024ல் 12ல் சனி, ஜென்மத்தில் ராகு, 3ல் குரு, மே மாதம் அதுவும் பெயர்ந்து விடும். ஒருவேளை திருமணம் முடித்து தான் ஆக வேண்டும் என்று எல்லாம் கூடியிருந்தால், ஏப்ரல் மாதத்திற்குள் அதை முடித்துவிடுங்கள். அதுவும் சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஜாதகத்தை ஒன்றுக்கு பலமுறை பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். மீனம் ராசிக்கு துலாம் ராசி ஒத்துப் போவாது. இந்த நேரத்தில் ஜாதகம் நல்லா இருக்கு என்று துலாம் ராசி ஜாதகத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். ரிஷபமும் தவிர்க்க வேண்டிய ஜாதகம். திருமணத்தில் அவசர முடிவு வேண்டாம். உறவில் இருப்பவர்களுக்கு கடும் மனஸ்தாபங்கள், பிரச்னைகள் வரும். தெளிவு வரும் வரை காத்திருங்கள்.
நன்றி
Publisher: tamil.hindustantimes.com