`போக்குவரத்து துறையில் ரூ.2000 கோடி ஊழல்’ – அண்ணாமலை

சாதாரண கவுன்சிலராககூட இல்லாத அண்ணாமலை மீது பல பணமோசடிக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. தேசிய தலைமை முதல் உள்ளூர் தலைமை வரை ஊழலில் திளைத்து இருக்கும் பா.ஜ.க-வுக்கு, எங்களை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. அண்ணாமலை உண்மை பேசியதாகவும் வரலாறு இல்லை. இதை நாங்கள் பெரிதாகவும் எடுத்து கொள்ளவில்லை.” என்றார் சூடாக.

தொடர்ந்து அண்ணாமலைக்கு நெருக்கமான சிலரிடம் பேசும்போது, “இப்படிதான் செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதன்படியே, பல்வேறு ரெய்டுகளில் சிக்கி, தற்போது சிறையில் இருக்கிறார். ஜாமீன் கேட்டு அல்லாடி வருகிறார். அதேபோலதான், அண்ணாமலை அமைச்சர் சிவசங்கர் குறித்து ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இதில் உண்மைகளில் இருப்பதால்தான் திமுக சைலன்டாக இருக்கிறது. இதுதொடர்பான ஆவணங்களை அண்ணாமலை விரைவிலேயே வெளியிடுவார்” என்றனர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலு உள்ளிட்ட தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருந்தார். இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று, டி.ஆர்.பாலு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் சமீபத்தில்தான் அண்ணாமலை ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, அமைச்சர் சிவசங்கர் மீதான அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு அவதூறு வழக்கு தொடர ஆயத்தமாகி வருகிறார்கள் என்கிறார்கள் தி.மு.க-வின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *