Last Updated : 14 Mar, 2024 10:27 PM
Published : 14 Mar 2024 10:27 PM
Last Updated : 14 Mar 2024 10:27 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கும் குறைவான விலையில் பயனர்களுக்கு தேவையான முக்கிய அம்சங்களை உள்ளடக்கி இந்த போன் வெளிவந்துள்ளது.
சீன தேசத்தை தலைமையிடமாக கொண்டு பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்ற நிறுவனம்தான் சியோமி. இதன் பிராண்டான போக்கோ கடந்த 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த 2021 முதல் இந்தியாவில் தங்களுக்கென பிரத்யேக லோகோ உடன் இயங்கி வரும் போக்கோ, பல்வேறு மாடல்களில் போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஜனவரியில் எக்ஸ்6 மற்றும் எக்ஸ்6 புரோ மாடல் போன்கள் வெளியாகி இருந்தன.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 13
- இரண்டு மேஜர் ஆண்ட்ராய்டு இயங்குதள அப்டேட்களுக்கு போக்கோ உறுதி அளித்துள்ளது
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் 108 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேரமா
- 8ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- 5,000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
- 8ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.15,999
- 12ஜிபி ரேம் கொண்டுள்ள போனின் விலை ரூ.17,999
- மூன்று வண்ணங்களில் வெளிவந்துள்ளது
- விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Take style for a spin with the bezel-less design and 120Hz AMOLED display of the #POCOX6Neo5G #SleekNSxy
Firsrt sale on the 18th March,12:00 PM on @Flipkart
Know Morehttps://t.co/07W9qvZSye#POCOIndia #POCO #MadeOfMad #Flipkart pic.twitter.com/YmtJBcSdfy
— POCO India (@IndiaPOCO) March 14, 2024
FOLLOW US
தவறவிடாதீர்!
நன்றி
Publisher: www.hindutamil.in