‘நத்திங் போன் (2a)’ இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ‘நத்திங் போன் (2a)’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டின் ஜூலை மாதம் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.

இதுவரை நத்திங் போன் (1), நத்திங் போன் (2) சந்தையில் வெளியிட்டுள்ளது. இந்த சூழலில் நத்திங் போன் (2a) ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.7 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7200 புரோ 5ஜி சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • பின்பக்கத்தில் ட்யூயல் கேமரா செட்-அப் கொண்டுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன் கொண்டுள்ளது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படவில்லை
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.23,999