மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.8 – 14

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ பிப்.8 - 14

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சூரியன், செவ்வாய், புதன் – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி – தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் குரு – பாக்கியஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 13ம் தேதி சூரியன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி சுக்கிரன் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி புதன் பகவான் தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு எதிலும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அடுத்தவரை நம்பி எதிலும் ஈடுபடாமல் இருப்பது நன்மையை தரும். சந்திரன் சஞ்சாரத்தால் ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டி இருக்கலாம். நீண்ட நாட்களாக நடந்து முடியாமல் இருந்த ஒரு வேலை நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையின் உடல்நிலையிலும் கவனமாக இருப்பது நல்லது.

கடன் விவகாரங்கள் காலதாமதமாகும். வர வேண்டிய பணம் தாமதப்படலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்காது. ஆனால் வருமானம் வழக்கம் போல் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கவனமாக பணி செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை யும், வாழ்க்கை துணையையும் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலை வார இறுதியில் நடந்து முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு லாபம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர துணிச்சல் அதிகரிக்கும். காரியதடைகள் நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சனி – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய், சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 13ம் தேதி சூரியன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி சுக்கிரன் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி புதன் பகவான் ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு பணவரத்து இருக்கும். எந்த விஷயத்திலும் உடனடி தீர்வுகாண முடியாத இழுபறி நிலை காணப்படும். சந்திரன் சஞ்சாரத்தால் புதிய நட்புகள் கிடைக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கவனத்தடுமாற்றம் உண்டாகலாம். மனதில் திடீர் கவலை தோன்றும். சகோதரர் வழியில் மனவருத்தம் தரக்கூடிய சம்பவம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பணவரத்தும் நிதானமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பிள்ளைகளிடம் எதையும் பக்குவமாக சொல்வது நன்மையை தரும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது.

பெண்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கைகொடுக்கும். அரசியல்துறையினருக்கு பதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் ஆசிரியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்கி வர கடன் பிரச்சினை தீரும். சிக்கலான பிரச்சினைகள் தீரும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் ராகு – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – களத்திர ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்ரன் – லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றம்: 13ம் தேதி சூரியன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 13ம் தேதி புதன் பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். சந்திரன் சஞ்சாரம் புதிய தொடர்புகளை உண்டாக்கும். பெண்கள் மூலம் நன்மை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ராசிக்கு 12ல் சஞ்சரிக்கும் சனி பலவகையிலும் வருமானத்தை பெற்று தரும். சிலர் புதிய வீடு கட்டும் பணி தொடங்குவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். ஆனால் கனவு தொல்லை உண்டாகலாம். நீண்ட நேரம் கண் விழிக்க நேரிடும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனவருத்தம் உண்டாகலாம். திடீரென்று கவனம் தடுமாறலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையான உழைப்பிற்கு பின் நல்ல பலன் பெறுவார்கள், போட்டிகள் விலகும்.

குடும்பத்தினர் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்களுக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பதன் மூலம் கல்வியில் வெற்றி உண்டாகும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட தடை நீங்கி காரியம் நடக்கும். எதிலும் வெற்றி கிடைக்கும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்




ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

'+divToPrint.innerHTML+'