பட்ஜெட் விலையில் லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் லாவா ‘யுவா 3’ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா யுவா 3 போன் அறிமுகமாகி உள்ளது.

யுவா 3 – சிறப்பு அம்சங்கள்

  • 6.5 இன்ச் ஹெச்டி+ பன்ச் ஹோல் டிஸ்பிளே
  • UNISOC டி606 ஆக்டா கோர் பிராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் ட்ரிபிள் ஏஐ கேமரா இடம்பெற்றுள்ளது
  • 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 4ஜிபி ரேம்
  • 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,000mAh பேட்டரி
  • டைப்-சி யுஎஸ்பி கேபிள்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதள அப்டேட் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • இதன் விலை ரூ.6,799 முதல் ஆரம்பமாகிறது
  • வரும் 7-ம் தேதி முதல் அமேசான் தளத்திலும், 10-ம் தேதி முதல் சில்லறை வர்த்தகர்கள் இடமிருந்தும் வாடிக்கையாளர்கள் இந்த போனை பெற முடியும்