இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

செய்திப்பிரிவு

Last Updated : 04 Jan, 2024 10:16 PM

Published : 04 Jan 2024 10:16 PM
Last Updated : 04 Jan 2024 10:16 PM

ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்களில் ஸ்டாண்டர்ட், புரோ மற்றும் புரோ+ போன்கள் அறிமுகமாகி உள்ளன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

ன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன.

ரெட்மி நோட் 13 சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6080 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • ஹைப்பர் ஓஎஸ் உடன் வெளிவந்துள்ள முதல் ரெட்மி போன். இதன் மூலம் லேப்டாப்பின் வெப் கேமரா உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு இந்த போனின் பின்பக்க கேமராவை பயன்படுத்த முடியும்.
  • ஐபோன்களில் இருப்பது போல டைனமிக் ஐலேண்ட் நோட்டிபிகேஷன் அமைப்பு
  • 100 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 5ஜி நெட்வொர்க்
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • முக்கியமாக இந்த போனின் பாக்ஸில் அதிவேக சார்ஜரும் சேர்த்து கிடைக்கிறது
  • 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் என மூன்று வேரியண்ட்களில் இந்த போன் கிடைக்கிறது.
  • இதன் ஆரம்ப விலை ரூ.16,999
  • ரெட்மி நோட் 13 போனுடன் நோட் 13 புரோ மற்றும் நோட் 13 புரோ+ மாடல் போன்களை ஒப்பிடும்போது ப்ராசஸர், கேமரா, பேட்டரி திறன், ஸ்டோரேஜ் வேரியண்ட் மற்றும் சார்ஜிங் சப்போர்ட் மாறுபடுகிறது. அதன் காரணமாக விலையும் கூடுகிறது
  • வரும் 10-ம் தேதி முதல் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்

FOLLOW US

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *