கருணாநிதியின் சினிமா வாழ்க்கை: விஜய் இயக்கும் ஆவணப்படம்

செய்திப்பிரிவு

Last Updated : 27 Dec, 2023 05:28 AM

Published : 27 Dec 2023 05:28 AM
Last Updated : 27 Dec 2023 05:28 AM

சென்னை: திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசும் திமுக-வும் கொண்டாடி வருகிறது. அதன்படி, தமிழ் சினிமாவில் கருணாநிதியின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ என்ற விழாவை தமிழ்த் திரையுலகம் ஜன.6-ம் தேதி நடத்த இருக்கிறது. கிண்டி ரேஸ் கோர்ஸில் இந்த விழா நடக்க இருக்கிறது.

இதில் கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற இருக்கின்றன. இந்நிலையில் கருணாநிதியின் திரை வாழ்க்கை பற்றிய முழு ஆவணப் படத்தை இயக்குநர் விஜய் இயக்க இருக்கிறார். அதற்கான பணிகளில் அவர் இப்போது ஈடுபட்டுள்ளார். இந்த ஆவணப் படம் இந்த விழாவில் திரையிடப்பட இருக்கிறது. இவர் ஜெயலலிதாவின் ‘தலைவி’ உட்பட பல படங்களை இயக்கியவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!




Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *