Skip to content
access_timeNovember 2, 2025
  • Facebook

Tech Tamil

தமிழில் தொழில்நுட்பம் பற்றிய சமீபத்திய செய்திகள்

home
  • முக்கிய செய்திகள்
  • அரசியல்
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • பொது சேவை மையம் (CSC)
  • ஜோதிடம்
  • தகவல்கள்
    • விவசாயம்
  • Facebook
  • முக்கிய செய்திகள்
  • அரசியல்
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
  • பொது சேவை மையம் (CSC)
  • ஜோதிடம்
  • தகவல்கள்
    • விவசாயம்
  • Facebook
முக்கிய செய்திகள் விளையாட்டு0

“அந்தக் கருத்துக்காக தலைநிமிர்ந்து நடக்கலாம்” – கவாஜாவுக்கு ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் ஆதரவு

By செய்திப்பிரிவுPosted onDecember 25, 2023

பெர்த்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் உஸ்மான் கவாஜா ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம் கொண்ட காலணி அணிந்து விளையாடும் விஷயத்தில் அவருக்கு முழு ஆதரவு தருவதாக அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

உஸ்மான் கவாஜா பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ‘எல்லா உயிர்களும் சமம்’ என்கிற வாசகம் அமைதியை போதிக்கும் புறா புகைப்படத்தையும் கொண்ட காலணியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இச்செயல் விதிமுறைகளுக்கு புறம்பானது எனக் கூறி இதுபோன்ற வாசகங்கள் அணிந்து விளையாட கவாஜாவுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. ஐசிசி விதிமுறைகளின்படி அரசியல் மற்றும் மதம் சம்பந்தமான வாசகங்கள் வீரரின் சீருடையில் எங்கும் பொறிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால், கவாஜா இதனை ஏற்கவில்லை. அவர் தன் சமூக ஊடகப் பதிவில் தன் எதிர்ப்பைப் பதிவு செய்யும் போது, “சுதந்திரம் மனித உரிமை மேலும் அனைத்து உரிமைகளும் சமமே. இந்த நம்பிக்கையை நான் கைவிடுவதாக இல்லை, உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டு ஐசிசி-க்கு சவால் விடுத்துள்ளார்.

இதனிடையே, கவாஜாவுக்கு ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த கம்மின்ஸ் இதுதொடர்பாக பேசுகையில், “கவாஜா, தனது நம்பிக்கையில் வலுவாக நிற்கிறார். அவர் மரியாதையான முறையில் தான் அனைத்து செயல்களையும் செய்கிறார் என நினைக்கிறேன். அவரை நாங்கள் ஆதரிக்கிறோம். அனைத்து உயிர்களும் சமம் எனச் சொல்வது, அவ்வளவு புண்படுத்தும்படியான கருத்து ஒன்றும் இல்லை. இக்கருத்தை பேசுவதற்காக கவாஜா தலைநிமிர்ந்து நடக்கலாம். ஆனால், ஐசிசி சில விதிமுறைகளை வகுத்துள்ளன. எனவே அவர்கள் இதை அங்கீகரிக்கப் போவதில்லை. ஐசிசியின் விதிமுறைகளுக்கு நாம் இணங்கிதான் செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். வாசிக்க: > ‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம்: ஐசிசி ‘தடை’யும், உறுதியான உஸ்மான் கவாஜாவின் சவாலும்!

'+k.title_ta+'

'+k.author+'
'; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });

Facebook
Facebook
fb-share-icon
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
Tag: Australia Captain Boxing Day Test dove logo dove logo shoe ICC Pat Cummins Usman Khawaja ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா கவாஜா காலணி கிரிக்கெட் பாட் கம்மின்ஸ்

Post navigation

Previous
Previous post: Ultimate Top 10 Most New Year’s Resolutions Ideas for 2024
Next
Next post: இரட்டை குழந்தை – சகோதர இரட்டையர் வேறுபாடு என்ன? அமெரிக்க பெண்ணுக்கு நடந்த அதிசயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

TekTamil Newsletter

சமீபத்திய தகவல்கள்

  • ‘குட் நைட்’ பட நாயகி மீதா ரகுநாத் திருமணம் 
  • இரும்பு நுரையீரல் என்றால் என்ன? கோடிக்கணக்கான மக்களை இது எப்படி காப்பாற்றியது?
  • குரு விடாமல் தருவார்.. யோகக்கார ராசிகள்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போவது யார்?
  • முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!
  • சனியை பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் ஆரம்பம்.. பணமழை பெறும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Post Categories

  • Clothing & Accessories (1)
  • Computer (536)
  • Computers & Accessories (528)
  • CSC (3)
  • Electronics (508)
  • Fashion (11)
  • Health & Personal Care (2)
  • Laptop (536)
  • Mobile Phone (523)
  • Smart Watch (523)
  • அரசியல் (2,000)
  • ஆன்மீகம் (1,553)
  • குறிப்புகள் (8)
  • கேள்வி பதில்​ (1)
  • சமையல் (1)
  • தகவல்கள் (329)
  • தொழில்நுட்பம் (2,200)
  • முக்கிய செய்திகள் (9,291)
  • விவசாயம் (1)
  • விளையாட்டு (1,059)
  • வேலைவாய்ப்பு (1,270)
  • ஜோதிடம் (1,803)

Archives

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • January 2023
  • December 2022

Categories

  • ‘குட் நைட்’ பட நாயகி மீதா ரகுநாத் திருமணம் 
  • இரும்பு நுரையீரல் என்றால் என்ன? கோடிக்கணக்கான மக்களை இது எப்படி காப்பாற்றியது?
  • குரு விடாமல் தருவார்.. யோகக்கார ராசிகள்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போவது யார்?
  • முதல் மலையாள பட சாதனை: தமிழகத்தில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ ரூ.50 கோடி வசூல்!
  • சனியை பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் ஆரம்பம்.. பணமழை பெறும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

ADMK Astrology BJP cinema Congress Cricket daily rasi palan DMK Horoscope india jodhidam Kadagam Kanni Magaram Meenam Mesham Midhunam ODIWC2023 online special politics Rasi Palan Rishabam Simmam Spirituality stalin Tamil Horoscope tamil rasi palan tamil rasi palangal Team India Viruchigam ஆன்மீகம் இந்தியா உலகக் கோப்பை கடகம் கன்னி கிரிக்கெட் சினிமா சிம்மம் ஜாதகம் ஜோதிடம் மகரம் மீனம் ராசி பலன் ராசிபலன் விருச்சிகம்

  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • January 2023
  • December 2022
© 2025 Tek Tamil - டெக் தமிழ் Privacy Policy