Last Updated : 06 Dec, 2023 10:37 PM
Published : 06 Dec 2023 10:37 PM
Last Updated : 06 Dec 2023 10:37 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13C 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் பட்ஜெட் விலையில் ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.74 இன்ச் எல்சிடி டிஸ்பிளே
- கொரில்லா கிளாஸ் 3 கோட்டிங் ஆன் ஸ்க்ரீன்
- டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெஸிஸ்டன்ட்
- மீடியாடெக் டிமான்சிட்டி 6100+ ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 5,000mAh பேட்டரி
- 18 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.10,999 முதல் தொடங்குகிறது
FOLLOW US
தவறவிடாதீர்!
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in

