
இந்தி நடிகையான கங்கனா ரனாவத் ராகவா லாரன்ஸுடன் நடித்த ‘சந்திரமுகி 2’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள இந்திப் படமான ‘தேஜஸ்’, கடந்த 27-ம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் அவர் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார்.
அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்கங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in
நன்றி
Publisher: www.hindutamil.in
