நவ.7ல் ‘கமல் 234’ படத்தின் முதல் தோற்ற வீடியோ

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்து பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’, ஹெச்.வினோத் இயக்கும் படங்களில் நடிக்கிறார். இதற்கிடையே மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு, அதாவது 37 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் 234 வது படமான இதன் முதல் தோற்ற வீடியோ, அவர் பிறந்த நாளான நவ.7ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *