அடுத்த ஆண்டு மார்ச்சில் ‘ரஜினி 171’ படப்பிடிப்பு?

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ‘ரஜினி 171’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்பாக நடிகர் – நடிகையர் தேர்வு, கதை விவாதம் உள்ளிட்ட பணிகளை முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *