உதகை: ஆண்டுதோறும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் அக்டோபர் மாதத்தில் ஜெபமாலை அன்னையின் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் ஜெபமாலை அன்னை திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் அனுமதியின் பேரில் பங்குத்தந்தை ரவி லாரன்ஸ் தலைமையில், வாழும் ஜெபமாலை குழுவோடு இணைந்து ஜெபமாலை ஜெபித்து வழிபாடு நடத்தப்பட்டது.
உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயம் சுமார் 800-க்கும் அதிகமான குடும்பங்களை கொண்டுள்ளது. அந்தந்தப் பகுதி வாரியாக சுமார் 32 அன்பியங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பங்கு தந்தையர், வாழும் ஜெபமாலை உறுப்பினர்கள், கன்னியர்கள் இணைந்து 32 அன்பியங்களுக்கும் தினந்தோறும் சென்று பொதுவான இடத்தில் ஜெபமாலை வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நன்றி
Publisher: www.hindutamil.in
