பருவநிலை மாற்றமும், வேற்று கிரகவாசியும்… – ‘அயலான்’ டீசர் எப்படி?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி?: டீசரின் தொடக்கத்தில் ‘பருவநிலை மாற்றம்’ குறித்து காட்சி இடம்பெறுகிறது. அடுத்து பறக்கும் தட்டு, ஏலியன் என ஜானர் மாறும் டீசரின் கிராஃபிக்ஸ் காட்சிகள் பிசிறில்லாமல் உருவாக்கப்பட்டுள்ளன. சிவகார்த்திகேயன் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை டீசரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ஒரு கட்டத்தில் ஏலியனுடன் இணைந்து வாழும் வகையிலான கதை ஹ்ரீத்திக் ரோஷனின் ‘கோய் மில் கயா’ படத்தை நினைவூட்டுகிறது. ஏலியன் வடிவமைப்பும் கவனம் பெறுகிறது. ரஹ்மானின் பின்னணி இசை டீசரை முழுமைப்படுத்துகிறது. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. டீசர் வீடியோ:

Ayalaan - Official Teaser | Sivakarthikeyan | A.R.Rahman | Rakul Preet Singh | R.Ravikumar



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *