ராமராக ரன்பீர், ராவணனாக யாஷ்: 3 பாகங்களாக உருவாகிறது ராமாயணம்

மும்பை: தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் நடிகை சாய் பல்லவி இப்போது இந்தியிலும் கவனம் செலுத்திவருகிறார். பிரபல இந்தி ஹீரோ ஆமிர்கான் மகன் ஜூனைத் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள சாய் பல்லவி, அடுத்து ராமாயணக் கதையில் சீதையாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்குகிறார்.

இதில் ராமராக ரன்பீர் கபூரும் ராவணனாக யாஷும் நடிக்க இருக்கின்றனர். மூன்று பாகங்களாக இந்தப் படத்தை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரியில் தொடங்க இருக்கிறது. இதன் படப்பிடிப்பில் யாஷ் ஜூலை மாதம் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்படுகின்றன.

முதலில் இந்தப் படத்தில் ஆலியா பட் சீதையாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விலகியதால், சாய் பல்லவி நடிக்கிறார்.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *